/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொகுதி மறு சீரமைப்பு கார்த்தி எம்.பி., எதிர்ப்பு
/
தொகுதி மறு சீரமைப்பு கார்த்தி எம்.பி., எதிர்ப்பு
ADDED : பிப் 27, 2025 01:36 AM
சிவகங்கை:''மக்கள்தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை அமைந்தால் தமிழகம் பாதிக்கப்படும்'' என சிவகங்கை காங்., எம்பி., கார்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக காங்., தலைவர் குறித்து தலைமைக்கு புகார் சென்றது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி லோக்சபா தொகுதிகளில் எண்ணிக்கை அமைந்தால் தமிழகம் பாதிக்கப்படும். இதை முழுமையாக எதிர்க்க வேண்டும்.
இதற்கு தமிழக முதல்வர் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை வரவேற்கிறேன். மனுநீதி சட்டத்தின் மூலம் இந்தியாவை ஆள வேண்டும் என்ற சித்தாந்தத்தில் பா.ஜ.,வினர் உள்ளனர் என்றார்.

