ADDED : ஆக 08, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி வடக்கு ஒன்றிய,நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, பேரூராட்சி துணைத் தலைவர் இபுராஹிம், மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி, மானாமதுரை தொகுதி தகவல் தொழில் பணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஒன்றியதுணைச் செயலாளர்கள்சிவனேசன், ராஜேந்திரன், நீலமேகம், நகர இளைஞரணி அமைப்பாளர் பைரோஸ் கான் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.