ADDED : ஜூலை 01, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:
காரைக்குடி அரசு மருத்துவமனையில் 50 ஆயிரம் பிரசவங்கள் பார்த்த பெண் டாக்டருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றியவர் டாக்டர். மைதிலி.
இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றினார்.
கடந்த 20 ஆண்டுகளில் 50 ஆயிரம் பிரசவம் வரை பார்த்துள்ளார். காரைக்குடி அரசு மருத்துவமனையில் 13 ஆண்டு பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருக்குபணி நிறைவு விழா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடந்தது.
தலைமை மருத்துவர் அருள்தாஸ், மாங்குடி எம்.எல்.ஏ., மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் பொதுமக்கள் தொழில் வணிக கழகத்தினர் உட்பட பாராட்டு தெரிவித்தனர்.