/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டிரைவர், கண்டக்டர்களுக்கு பாராட்டு
/
டிரைவர், கண்டக்டர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 23, 2024 04:08 AM
காரைக்குடி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், காரைக்குடி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றி போக்குவரத்து துறைக்கு வருவாய் ஈட்டிக் கொடுத்த 22 கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களை நிர்வாக இயக்குனர் பொன்முடி பாராட்டினார்.
காரைக்குடி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில், பாராட்டு விழா நடந்தது. இதில், சிறப்பாக பணியாற்றி போக்குவரத்திற்கு வருவாய் ஈட்டி தந்த 11 டிரைவர்கள், 11 கண்டக்டர்களை நிர்வாக இயக்குனர் பொன்முடி கவுரவித்தார்.
மேலும் பயணிகளை வாடிக்கையாளர் ஆக்குவோம் என்ற இலக்குடன் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
இதில் காரைக்குடி மண்டல பொது மேலாளர் கந்தசுவாமி, துணை மேலாளர் நாகராஜன், உதவி மேலாளர் தமிழ்மாறன், நிர்வாக துணை மேலாளர் பத்மகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.