ADDED : ஆக 01, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களை விரைவாக கைது செய்த போலீசாரை பாராட்டி எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டு சான்று வழங்கினார்.
சிவகங்கை அருகே வேலாங்குளத்தில் பா.ஜ., நிர்வாகி செல்வக்குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், சிவகங்கை மரக்கடை வீதியில் ராஜபாண்டி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் காளையார்கோவில் தனியார் நிதிநிறுவன பணத்தை வழிப்பறி செய்தவர்கள் உள்ளிட்டவர்களை விரைவாக கண்டுபிடித்ததற்காக டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல், மணிகண்டன், எஸ்.ஐ.,க்கள் சரவணகுமார், குகன், ஹரிகிருஷ்ணன், விஜய் உள்ளிட்ட 45 தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டுச் சான்று வழங்கினார்.