ADDED : மே 16, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்க கூட்டம் சங்க தலைவர் குமரப்பன் தலைமையில் நடந்தது.
செயலாளர் குருசாமி சங்க செயல்பாடுகளை விளக்கினார். பொருளாளர் சந்திரன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். பிளஸ் 2 தேர்வில் நகரில் முதலிடமும், மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்ற பெத்தாள் ஆச்சி பெண்கள் பள்ளி மாணவி சாரதா பிரியா விற்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த நடையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார்.