நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, - காரைக்குடியை சேர்ந்த மாணவன் ரா.
ஸ்ரீநிவாஸ் 9. தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 43 வினாடிகளில் கூறி சாதனை செய்துள்ளார். அதேபோல் அவ்வையாரின் மூதுரையை முழுமையாக 2 நிமிடம் 40 வினாடிகளில் கூறி கலாம் சாதனை படைத்துள்ளார். மாணவனுக்கு ரோட்டரி கிளப் ஆப் காரைக்குடி பியர்ல் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பல்கலை தேர்வாணையர் ஜோதிபாசு சான்றிதழ் வழங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் லியாத்கான், அழகப்பா மெட்ரிக் பள்ளி முதல்வர் நேரு வாழ்த்தினர். சங்கத் தலைவர் முருகப்பன், செயலாளர் பிரான்சிஸ் சேவியர் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.