ADDED : செப் 06, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி சிக்ரியில் ஜிக்யாசா சார்பில் மாநில பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி வகுப்பு மற்றும் போட்டி நடந்தது.
அறிவியல் மாதிரி வடிவமைப்பு போட்டியில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தனுஷ்கா, சனாஸ்ரீ குழுவினர் முதல் பரிசு பெற்றனர். வினாடி-வினா போட்டியில் ஜெய்துர்கா, ஹர்ஷினி குழுவினர் இரண்டாம் பரிசையும், ஸ்ரீதா குழுவினர் மூன்றாம் பரிசையும் பெற்றனர். சேர்மன் சேதுராமன் முதன்மை முதல்வர்கள் அஜய் யுத்தேஷ், அடைக்கலசாமி, ஆசிரியர்கள் பாராட்டினர்.