/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கராத்தேயில் வென்றவர்களுக்கு பாராட்டு
/
கராத்தேயில் வென்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 12, 2024 04:29 AM
மானாமதுரை: தமிழ்நாடு விளையாட்டு கராத்தே சங்கம் சார்பில் சப் ஜூனியர் தமிழ்நாடு சாம்பியன் போட்டி துரைப்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் மானாமதுரை நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள்லலினா (12 வயது பெண்கள்) சண்டை 40 கிலோ பிரிவில் முதல் பரிசும் தங்கப்பதக்கமும்,கட்டா பிரிவில் 2ம் பரிசும் வெள்ளிப்பதக்கமும், திக்க்ஷன் 11 வயது சண்டை 45 கிலோ பிரிவில் 3ம் பரிசும் வெண்கலப்பதக்கமும், ஜெகத் அர்சிக் 9 வயது சண்டை 30கிலோ பிரிவில் 3ம் பரிசும் வெண்கலப்பதக்கமும், ஸ்ரீபிரணவ் 8வயது சண்டை 40கிலோ பிரிவில் ஆறுதல் பரிசும் பெற்று தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை வென்று ஆல் இந்தியா சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இவர்களையும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் சிவநாகர்ஜுன் ஆகியோரை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.