/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சோழபுரம் உலகு சவுந்தரி அம்மன் கோயிலில் மே 13ல் கும்பாபிேஷகம்
/
சோழபுரம் உலகு சவுந்தரி அம்மன் கோயிலில் மே 13ல் கும்பாபிேஷகம்
சோழபுரம் உலகு சவுந்தரி அம்மன் கோயிலில் மே 13ல் கும்பாபிேஷகம்
சோழபுரம் உலகு சவுந்தரி அம்மன் கோயிலில் மே 13ல் கும்பாபிேஷகம்
ADDED : மே 10, 2024 11:15 PM
சிவகங்கை : சிவகங்கை அருகே சோழபுரம் உலகு சவுந்தரி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் மே 13 அன்று நடைபெறுகிறது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சோழபுரம் உலகு சவுந்தரி அம்மன் கோயிலில், மே 12 அன்று மாலை 3:30 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜை துவங்குகின்றன.
அன்று மாலை 6:00 மணிக்கு கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், எந்திர பிரதிஷ்டை, மருந்து சாத்துதல் நடக்கும். இரவு 8:30 மணிக்கு முதற்கால பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். மே 13 அன்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரதானம், கடம் புறப்பாடு நடைபெறும். அன்று காலை 9:15 மணி முதல் 10:15 மணிக்குள் உலகு சவுந்தரி அம்மன் கோபுர கலசம், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.
தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் வேல்முருகன், கிராம மக்கள் சார்பில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.