sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கொல்லங்குடி வெட்டுடையார் கோயிலில் செப்.8ல் கும்பாபிேஷகம்

/

கொல்லங்குடி வெட்டுடையார் கோயிலில் செப்.8ல் கும்பாபிேஷகம்

கொல்லங்குடி வெட்டுடையார் கோயிலில் செப்.8ல் கும்பாபிேஷகம்

கொல்லங்குடி வெட்டுடையார் கோயிலில் செப்.8ல் கும்பாபிேஷகம்


ADDED : செப் 01, 2024 01:47 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேவுள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் கும்பாபிேஷகம் செப்.,8ல் நடக்கிறது.

ஹிந்து அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோயிலில் செப்., 4 காலை 9:45 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷகத்துக்கான பூஜை துவங்குகிறது. அன்று மாலை 4:30 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடக்கும்.

செப்., 5 காலை 7:35 மணிக்கு புனித தீர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 4:15 மணிக்கு கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், கடஸ்தாபனம், முதல் கால வேள்வி நடக்கும்.

செப்., 6 காலை 8:15 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை துவங்கும். அன்று மதியம் 12:05 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கும். மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, இரவு 8:15 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனைநடக்கும்.

செப்.,7 காலை 8:35 மணிக்கு நான்காம் காலவேள்வி, காலை 11:45மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கும். மாலை 4:30 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜைகள் நடக்கும். செப்.,8 காலை 6:15 மணிக்கு ஆறாம் கால வேள்வி, மங்கள இசை, மண்டப சாந்தி, கோபூஜை நடக்கும்.

அன்று காலை 10:45 முதல் 11:45 மணிக்குள் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடத்தி வைக்கின்றனர். மாலை 6:15 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வெட்டுடையார் காளி திருவீதி உலா வருவார்.

ஹிந்து அறநிலையத்துறை தக்கார் ஞானசேகரன், செயல் அலுவலர் நாராயணி மற்றும் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us