/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் கும்பாபிஷேகம்
/
திருக்கோஷ்டியூரில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 07, 2024 05:34 AM

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் தெற்கு தெரு கண்ணாத்தாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோயிலுக்கு கண்ணாத்தாள், செல்வ விநாயகர்,முருகன்,அகில பரிபூரணி பக்த செளபாக்கியதாகினி, சக்ரவாஷினி சன்னதிகள்,முன்மண்டபம் ஆகிய திருப்பணிகள்
நடந்தது. தொடர்ந்து கும்பாபிேஷகத்தை முன்னிட்டு செப்.5 காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை
இரண்டாம் காலயாக பூஜை நடந்து, பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின், யாகசாலை பூஜையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி நேற்று காலை 10:00 மணிக்கு விமான,கோபுர கலசங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமிகளுக்கு மூலவர் சன்னதியில் சிறப்பு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாட்டினை விழாக்குழு நிர்வாகிகள், இளைஞர்அணி,கிராமத்தினர் செய்தனர்.