ADDED : ஜூலை 01, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர், : திருப்புத்தூர் கோட்டைக் கருப்பண்ண சுவாமி கோயிலில் கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீட்டுவிழா நடந்தது. திருப்பணி குழு தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி மலரை வெளியிட்டார். தாசில்தார் மாணிக்கவாசகம் மலரை பெற்றார். பேராசிரியர்கள் அருணாசலம், வள்ளி, சேதுபதி மலர் மதிப்புரை ஆற்றினர். பழநியப்பன் நன்றி கூறினார். திருப்பணிக்குழு துணைத் தலைவர்கள் லட்சுமணன், ராமசாமி, செயலர் அண்ணாதுரை, துணை செயலர்கள் சிவப்பிரகாசம், காசிநாதன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம் பங்கேற்றனர்.