/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி
/
காரைக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி
ADDED : மார் 25, 2024 06:51 AM

காரைக்குடி : காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. பங்குத்தந்தை சார்லஸ் உதவி பங்குத்தந்தை குழந்தை இயேசு பாபு ஆகியோர் புனித நீரால் குருத்தோலைகளை அர்ச்சித்து பவனியை தொடங்கி வைத்தனர். சிறுவர்கள் சிலுவையினை கையில் ஏந்தியபடி தொடங்கிய பவனியானது, அம்பேத்கர் சிலை தொடங்கி செக்காலை ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.
இதில், சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் கார்த்தி, மாங்குடி எம்.எல்.ஏ.,கலந்து கொண்டனர்.
காரைக்குடி செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலய பங்குத்தந்தை மரிய அந்தோணி, அரியக்குடி வளன் நகர் குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை அருள் ஆனந்த், ஆவுடைப்பொய்கை புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை சாமு இதயன், மானகிரி ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை அந்தோணி சாமி திருப்பலியை நிறைவேற்றினர்.
திருப்புத்துார்:. திருப்புத்துாரில் தென்மாபட்டு அந்தோணியார் சர்ச்லிருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். பங்குதந்தை அற்புதஅரசு குருத்தோலைகளை புனிதப்படுத்தி ஊர்வலத்தை துவக்கினார்.
திருப்புத்துார் புனித அமல அன்னை ஆலயம் வந்தடைந்தனர். ஊர்வலத்தின் போது ”தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்பன உள்ளிட்ட கிறிஸ்தவ பாடல்களை பாடி ஏசுவின் பாட்டுகளை நினைவுக் கூர்ந்தனர். பங்குத்தந்தை சந்தியாகு தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலையை கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
சிவகங்கை: சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலை பள்ளி முன்பு குருத்தோலைகளை ஏந்தி பவனி வந்தனர். முன்னாள் பிஷப் சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். அலங்கார அன்னை சர்ச் பங்கு தந்தை ஜேசுராஜ் முன்னிலை வகித்தார். கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி, பள்ளியில் இருந்து ஊர்வலமாக புனித அலங்கார அன்னை ஆலயத்திற்கு சென்றனர். அங்கு சிறப்பு திருப்பலி நடந்தது. சிவகங்கை கல்லுாரி ரோட்டில் உள்ள இமானுவேல் சர்ச், காரைக்குடி பர்மா காலனி சி.எஸ்.ஐ., சர்ச், சிவகங்கை அருகே ஒக்கூர் புனித ஜான்பீட்டர் சர்ச், சிங்கம்புணரி சி.எஸ்.ஐ., சர்ச், இளையான்குடி சகாயமாதா சர்சகளில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி, ஊர்வலம் நடைபெற்றது. //

