/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு
/
கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு
ADDED : மே 06, 2024 12:26 AM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் கிராமங்களில் கோடை வெயிலில் வற்றி வரும் ஊரணிகளால் கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் வழக்கமான அளவில் நெல் சாகுபடி நடைபெறவில்லை. இதனால் தீவனத் தட்டுப்பாடு விவசாயிகளிடம் உள்ளது. தற்போது ஊரணிகள், குட்டைகள், கண்மாய்களில் நீர் வற்றி விட்டதால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கின்றன.
வீடுகளுக்கு திரும்பிய பின்னரே தண்ணீர் கிடைக்கிறது. சில கிராமங்களில் ஊரணி அருகே போர்வெல் தண்ணீரை சிறு பள்ளங்களில் நிரப்பி கால்நடைகளுக்கு குடிநீர் அளிக்கின்றனர். கோடை மழை பெய்தால் தான் இதற்கு தீர்வு என்று விவசாயிகள் மழையை எதிர்ப்பார்க்கின்றனர்.
இருப்பினும் மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மூலம் கிராமங்களில் கால்நடைகளுக்கான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான இடங்களில் தற்காலிக பள்ளங்களில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கலாம்.