ADDED : செப் 07, 2024 05:36 AM

சிவகங்கை: காரைக்குடியில் ரூ.பல கோடி மதிப்புள்ள 60 சென்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து பத்திரபதிவு செய்த வழக்கில், மேலும் ஒருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
மதுரை தல்லாகுளம் ராமசாமி மகன் சோமசுந்தரம் 58. இவருக்கு சொந்தமான 60 சென்ட் நிலம் ரூ.பல கோடி மதிப்பில் உள்ளது. இந்த இடத்தை அருகில் உள்ள தேரளப்பூர் சோமசுந்தரம் என்பவர் தன்னுடைய நிலம் என்று கூறி ஆள்மாறாட்டம் செய்து பவர் பத்திரம் தயாரித்த உடன், காரைக்குடியை சேர்ந்த அப்பாஸ் என்பவருக்கு காரைக்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பிருந்தா, இன்ஸ்பெக்டர் மன்னவன், எஸ்.ஐ., ராதாகிருஷ்ணன், சிறப்பு எஸ்.ஐ., சக்திவேல் ஆகியோர் விசாரித்து பத்திரிகையாளர் முத்து சாக்ரடீஸ் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே போலி பத்திரம் தயாரித்த தேரளப்பூர் சோமசுந்தரத்தை கைது செய்திருந்தனர். இதில் தலைமறைவாக இருந்த காரைக்குடி அருகே பெரியகோழிக்கரை பட்டி கருப்பையா மகன் கார்த்திக் 39, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். ///