/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழாய் வால்வில் கசிவு வீணாகும் குடிநீர்
/
குழாய் வால்வில் கசிவு வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 22, 2025 06:33 AM

மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் குழாய் வால்வுகளில் குடிநீர் கசிந்து வீணாகி வருவதால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 4500க்கும் மேற்பட்ட இணைப்பு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மானாமதுரை அருகே ராஜகம்பீரம் வைகை ஆற்று பகுதியில் உறைகிணறு மற்றும் போர்வெல் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் மானாமதுரை நகர் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே உள்ள வால்வுகளில் அதிகளவில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறியதாவது: ராஜகம்பீரத்திலிருந்து மானாமதுரைக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக வால்வுகளில் அவ்வப்போது கசிவு ஏற்பட்டு வருகிறது.
இதனை உடனடியாக சரி செய்து வருகிறோம் என்றனர்.