ADDED : மார் 05, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் திட்டத்தின் கீழ் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலை சமூக பணித்துறை சார்பில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வழக்கறிஞர் சேதுராமன், மாவட்ட சமூக நலப் பணியாளர்கள் நித்யா, சந்தியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் மணிமேகலை, மகாலட்சுமி, ஜாய் சாரா கலந்து கொண்டனர். சமூகப் பணித்துறை தலைவர் வேலுச்சாமி தலைமையில் மாணவ, மாணவிகள் பறை இசைத்தும், கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.