ADDED : மார் 11, 2025 05:00 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச பெண்கள் தினம் மற்றும் மனித கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவாச்சலு, மாவட்ட குடும்ப நல நீதிபதி முக்துக்குமரன்,மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்பசும்பொன் சண்முகையா, சார்பு நீதிபதி பாண்டி, ஊழல் தடுப்பு நீதிபதி செந்தில்முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்சார்பு நீதிபதி ராதிகா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி செல்வம், வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை உள்ளிட்டோர் பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசினர்.