ADDED : ஜூலை 07, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுகுமாரி முன்னிலை வகித்தனர். சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல பெட்டகமும் நோயாளிகளுக்கு மருந்து பெட்டிகளும் வழங்கப்பட்டது. முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கண்ணன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.