ADDED : செப் 06, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியருக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திடவும், மாணவர்கள் - ஆசிரியர்கள் உறவினை மேம்படுத்தும் வகையிலும், நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காரைக்குடி போஸ்ட் ஆபீஸ் சார்பில் வகுப்பறையில் அஞ்சல் பெட்டி வைக்கப்பட்டது. மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதி அதனை அஞ்சல் பெட்டி மூலம் அனுப்பினர். பள்ளி சேர்மன் சேதுராமன் முதன்மை முதல்வர் அஜய் யுக்தேஷ் பாராட்டினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதல்வர் பரமேஸ்வரி செய்திருந்தார்.