/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் நகர்ப்புறத்துடன் பழையூர் இணைப்பு
/
திருப்புவனம் நகர்ப்புறத்துடன் பழையூர் இணைப்பு
ADDED : ஆக 08, 2024 04:38 AM
திருப்புவனம்: திருப்புவனம் பழையூரில் 30 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் நகர்பகுதி மின் வாரியத்துடன் இணைக்கப்பட்டு புதிய மின்மாற்றியை எம்.எல்.ஏ., தமிழரசி திறந்து வைத்தார்.
திருப்புவனம் பழையூரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்புவனம் நகரையும் பழையூரையும் மதுரை-- ராமேஸ்வரம் அகல ரயில் பாதை பிரிக்கிறது.
திருப்புவனம் நெல்முடிகரை துணை மின் நிலையத்தில் இருந்து நகர்ப்பகுதிக்கு மின்சார விநியோகம் நடந்தாலும், நகர்ப்பகுதியைச் சேர்ந்த பழையூருக்கு மட்டு ஊரகப்பகுதியில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது.
இதனால் அடிக்கடி மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம், மின்சாதனங்கள் பழுது உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர்.
எனவே நகர்ப்பகுதி மின்வாரியத்துடன் இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்தனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது ரயில்வே நிர்வாகத்திடம்அனுமதி வேண்டி விண்ணப்பித்தையடுத்து தற்போது அனுமதி கிடைக்கப்பெற்று நகர்ப்புறத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான தொடக்கவிழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி கலந்து கொண்டார்.
விழாவில் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் உலகப்பன்,உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.