நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை, : தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் சுப அண்ணாமலையார் அறக்கட்டளை சார்பில் இலக்கிய சொற்பொழிவு முதல்வர் நாவுக்கரசு தலைமையில் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் கண்ணதாசன் வரவேற்றார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலை நாட்டுப்புறவியல் தலைவர் காமராசு புரைப்பாடா மனம் என்ற தலைப்பில் பேசினார். அறக்கட்டளை சார்பில் வள்ளலாரின் சன்மார்க்கம், சாகாவாழ்வு, மரணமில்லா பெருவாழ்வு தலைப்புகளில் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. நிவேதிதா முதலிடம், தேவிஸ்ரீ இரண்டாமிடம், அதிர்ஷ்ட லட்சுமி மூன்றாமிடம் பெற்றனர். முன்னாள் தமிழ்த்துறை தலைவர் ஆறுமுகம், கவிஞர் முத்துராமலிங்கம், சிந்தனைச் சோலை செயலாளர் தமிழ்செல்வன் பங்கேற்றனர். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் இளங்கோ நன்றி கூறினார்.

