/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் வட்டாரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கால்நடைகள்
/
திருப்புவனம் வட்டாரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கால்நடைகள்
திருப்புவனம் வட்டாரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கால்நடைகள்
திருப்புவனம் வட்டாரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கால்நடைகள்
ADDED : செப் 03, 2024 05:41 AM

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் நாளுக்கு நாள் மின்சாரம் தாக்கி கால்நடைகள் உயிரிழந்து வருவது கால்நடை வளர்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனத்தைச் சுற்றிலும் லாடனேந்தல், வயல்சேரி, கழுகேர்கடை, மணல்மேடு, பெத்தானேந்தல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் வட்டாரத்தில் தான் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. பகலில் விவசாயிகள் மேய்ச்சலுக்கு வயல்வெளிகள், கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்வது வழக்கம், பெரும்பாலான கிராமங்களில் விவசாய பம்ப்செட்களுக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.
இவை காற்றடிக்கும் காலங்களில் அறுந்து விழும் நிலையில் தெரியாமல் மிதிக்கும் கால்நடைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்து வருகின்றன.
மின்சாரம் தாக்கி கால்நடைகள் உயிரிழந்து வருவது குறித்து விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.
நேற்று லாடனேந்தலில் சினையாக இருந்த கறவை மாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
வயல்சேரி கிராமத்தினுள் மின் கம்பி அறுந்து விழுந்ததில் தெருவில் நின்ற நாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
கிராம மக்கள் நாய் இறந்து கிடப்பது கண்டு அருகில் சென்று பார்த்த போதுதான் மின் கம்பி கிடப்பது தெரியவந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்து மின்கம்பியை அகற்றினர்.