ADDED : ஏப் 28, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அருகே மடைக்கருப்ப சுவாமி கோயில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்மாயில் தேங்கும் நீரை, பாசனத்திற்கு திறந்து விடுவதற்காக மடையில் வீற்றிருக்கும் கருப்பருக்கு படையல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பின் கண்மாய் மடையை திறந்து பாசனத்திற்குப் பயன்படுத்துவர்.
சித்திரை முதல்நாள் வருடப் பிறப்பில் விரதத்தைத் துவக்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஆடுகளை பூஜாரியிடம் வழங்குவர். 240 ஆடுகள் வழங்கப்பட்டன.
நேற்று இரவு 240 ஆடுகளையும் சுவாமிக்கு பலியிட்டனர். கிராம மக்கள் சார்பில் 3 ஆயிரம் ஆண் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மடையைத் திறந்தனர்.
விழாவில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மேலுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

