ADDED : மார் 11, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த ஆணழகன் போட்டியில் 'மிஸ்டர் சிவகங்கை' பட்டத்தை சரவணன் பெற்றார்.
நிர்வாகி முத்துராஜா வரவேற்றார். மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். ஒட்டு மொத்த பரிசை வென்று 'மிஸ்டர் சிவகங்கை' என்ற பட்டத்தை சரவணன் என்பவர் பெற்றார்.
45 முதல் 50 கிலோ எடை பிரிவில் கல்லல் ஜெயராம், 50 முதல் 55 கிலோ எடை பிரிவில் சிவகங்கை மரியன், 55 முதல் 60 கிலோ எடை பிரிவில் கல்லல் ராஜா, 60 முதல் 65 கிலோ எடை பிரிவில் தேவகோட்டை முத்து, 65 முதல் 70 கிலோ எடை பிரிவில் குருபிரசாத், 70 கிலோவிற்கு மேற்பட்ட எடை பிரிவில் சிவகங்கை சரவணன் வெற்றி பெற்றனர்.
ஒருங்கிணைப்பாளர்கள்உதயன், நாகராஜன், வெற்றிவேல் ஏற்பாட்டை செய்திருந்தனர். குணதாசன் நன்றி கூறினார்.