ADDED : பிப் 28, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் வரவேற்றனர்.
கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால் கொசு மருந்து அடிக்க வேண்டும், குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும், கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக அனைத்து கவுன்சிலர்களின் ஆலோசனைகளை கேட்ட பிறகு தீர்மானங்களை கூட்டத்தில் முன்மொழிய வேண்டும் என்றனர்.
மேலாளர் பாலகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

