/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ராம் நகர் ரோடு அதிகாரிகள் உறுதி
/
மானாமதுரை ராம் நகர் ரோடு அதிகாரிகள் உறுதி
ADDED : ஏப் 18, 2024 06:20 AM
மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியில் உள்ள ராம் நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முக்கியமாக 3 தெருக்களும், 10க்கும் மேற்பட்ட குறுக்குத் தெருக்களும் உள்ளன.
இந்நிலையில் ராம்நகர் 1 வது குறுக்கு தெருவில் கிழக்கு பகுதியில் ரோடு அமைக்க வேண்டி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.
நகராட்சி நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது வரை ரோடு அமைக்கப்படவில்லை. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட கலெக்டரிடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நல சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதனை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர்.
நேற்று மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜா, நகராட்சி கமிஷனர் ரங்கநாயகி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சமரச கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வாபஸ் பெற்றனர்.

