/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை விழாவில் தசாவதாரம்
/
மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை விழாவில் தசாவதாரம்
மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை விழாவில் தசாவதாரம்
மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை விழாவில் தசாவதாரம்
ADDED : ஏப் 27, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று முன்தினம்  மானாமதுரை கிராமத்தார்கள் மண்டகப்படியில் நடைபெறும் பக்தி உலாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கருட வாகனத்தில் வீதி உலா சென்று தசாவதார நிகழ்ச்சிக்காக கோர்ட்டார் மண்டகப்படிக்கு வந்தடைந்தார்.
அங்கு ராமர், கிருஷ்ணர், மச்ச அவதாரம் உள்ளிட்ட பல்வேறு அவதாரங்களில் எழுந்தருளினார்.  இன்று 27ம் தேதி சந்தன காப்பு உற்ஸவ சாந்தியுடன்  சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.