ADDED : ஜூன் 16, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் மணக்குடியில் கோயில் விழாவை முன்னிட்டு அனுமதியில்லாமல் நடந்த மஞ்சுவிரட்டு குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மணக்குடியில் ஆதினமிளகி அம்மன், விநாயகர் கோயில் பூத்தட்டு விழா ஆண்டுதோறும் நடைபெறும். விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:50 மணிக்கு மஞ்சுவிரட்டு துவங்கியது. தொழுவிலிருந்து காளைகள்அவிழ்க்கப்பட்டன. காளைகளை பிடிக்க முயன்றதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
காலை முதல் வயல்வெளி,கண்மாய்களில் கட்டுமாடுகளும் அவிழ்க்கப்பட்டன. அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால் கண்டவராயன்பட்டி போலீசார் ஏற்பாட்டாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.