/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேப்பல் கோயில் விழா: மஞ்சுவிரட்டில் 300 காளைகள்
/
மேப்பல் கோயில் விழா: மஞ்சுவிரட்டில் 300 காளைகள்
ADDED : மே 01, 2024 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மேப்பல் கிராமத்தில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோயிலில் சித்திரை பவுர்ணமிக்கு பின் திருவிழா நடைபெறும்.
நேற்று காலை 11:00 மணிக்கு மஞ்சுவிரட்டு பொட்டலில் முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் தொழுவில் இருந்த காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிட்டனர்.
இதை மாடு பிடி வீரர்கள் பிடித்தனர். அதனை தொடர்ந்து பொட்டலில் கட்டி வைத்திருந்த கட்டுமாடுகளை அவிழ்த்து விட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.