sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்பாச்சேத்தியில் 'மருதமலை' சம்பவம்; 3வது காதலுக்காக குழந்தையை கொலை செய்த தாய் கைது

/

திருப்பாச்சேத்தியில் 'மருதமலை' சம்பவம்; 3வது காதலுக்காக குழந்தையை கொலை செய்த தாய் கைது

திருப்பாச்சேத்தியில் 'மருதமலை' சம்பவம்; 3வது காதலுக்காக குழந்தையை கொலை செய்த தாய் கைது

திருப்பாச்சேத்தியில் 'மருதமலை' சம்பவம்; 3வது காதலுக்காக குழந்தையை கொலை செய்த தாய் கைது

1


ADDED : மே 27, 2024 11:44 PM

Google News

ADDED : மே 27, 2024 11:44 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி : சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் 4 மாத குழந்தையை கொலை செய்ததாக தாய் மஞ்சு கைது செய்யப்பட்டார். 'மருதமலை' சினிமா பாணியில் 3வது காதலுக்காக கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாகர்கோவில் மந்தாரபுதுார் சேகர் மகள் மஞ்சு என்ற ஷாலினி 27. இவர் கோவையில் தனியார் கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்தார். இந்த கிளினிக்கிற்கு அருகில் உள்ள பேக்கரியில் திருப்பாச்சேத்தி அருகே நாட்டாகுடியை சேர்ந்த சந்திரசேகரன் பணிபுரிந்தார். இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஷாலினி கர்ப்பம் அடைந்ததால், அவரை சொந்த ஊரான நாட்டாகுடிக்கு கணவர் அழைத்து வந்தார். இங்கு குழந்தை பிறந்து 4 மாதமே ஆன நிலையில், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மே 21ல் 4 மாத குழந்தையுடன் மஞ்சு மாயமானார்.

இரவில் சந்திரசேகரனிடம் பேசிய அவர், குழந்தையை தேட வேண்டாம், கோயில் பின்புறம் கட்டை பையில் குழந்தையை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மே 22 ம் தேதி சந்திரசேகரன் அங்கு சென்று பார்த்த போது, குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இறந்த குழந்தையை போலீசுக்கு தெரிவிக்காமல், சந்திரசேகரன் அவரது தாய் காளிமுத்து 65,ம் சேர்ந்து புதைத்து விட்டனர்.

இந்த விபரம் போலீசுக்கு தெரியவே மே 23 ல் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். அதில் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

தலைமறைவான மஞ்சு என்ற ஷாலினியை தென்காசி மாவட்டம், ஆயக்குடியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மருதமலை சம்பவம் நிஜமானது


அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியது: மஞ்சுவிற்கு ஏற்கனவே நாகர்கோவிலை சேர்ந்த ஜெபின் ஜோஸ்-- என்பவருடன் திருமணம் முடிந்து 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. அவரை கைவிட்டு சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்துள்ளார். மூன்றாவதாக ஆயக்குடியை சேர்ந்த ரூபன் என்ற லுார்து மைக்கேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்வதற்காக சந்திரசேகருடன் தகராறு செய்து குழந்தையுடன் வெளியேறியுள்ளார். குழந்தையை கட்டைபையில் வைத்து காட்டிற்குள் துாக்கி வீசியுள்ளார்.

அப்போது தலையில் அடிபட்டு குழந்தை இறந்துள்ளது என்றனர்.

வடிவேலு நடித்த மருதமலை சினிமாவில் நகைச்சுவைக்காக ஒரே பெண் பலரை காதலித்து திருமணம் செய்த காட்சி வரும். அது இங்கு நிஜமாகியுள்ளது.

திருப்பாச்சேத்தி போலீசார் குழந்தையை கொலை செய்த வழக்கில் மஞ்சு என்ற ஷாலினி, போலீசுக்கு தெரியாமல் உடலை புதைத்ததாக சந்திரசேகரன், காளிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

தனிப்படை எஸ்.ஐ., சிவசுப்பு, போலீசார் கண்ணன், அருண்சோழன், கார்த்திக் ஆகியோரை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், டி.எஸ்.பி., கண்ணன் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us