/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு அம்மை நோய்
/
அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு அம்மை நோய்
ADDED : ஆக 29, 2024 11:32 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்குருந்தங்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அம்மை நோய் பாதித்ததால்பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
காளையார்கோவில் ஒன்றியம் மல்லல் ஊராட்சியில் உள்ளது குருந்தங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 20 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 10 மாணவர்களுக்கு அம்மை நோய் பாதித்துள்ளது.
ஆசிரியர் கூறுகையில், அம்மை நோய் ஏற்கனவே சில மாணவர்களுக்கு வந்து சரியாகிவிட்டது. தற்போது பள்ளியில் படிக்கும் 4 மாணவர்களுக்கு உள்ளது. அவர்களுக்கு விடுப்பு கொடுத்து தனிமையில் உள்ளனர். சுகாதாரத்துறையினர் பள்ளியை ஆய்வு செய்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறினர்.
மாவட்ட சுகாதார அலுவலர் விஜயச்சந்திரன்கூறுகையில், அம்மை நோய் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை கொடுத்துள்ளோம்.
குருந்தங்குளம் பள்ளிக்கு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இது தொற்று என்பதால் பாதிக்கப்பட்ட மாணவர்களை தனிமை படுத்திக்கொள்ள கூறியுள்ளோம்.
பெற்றோர்கள் அவர்களுக்கு இளநீர், தண்ணீர்நீராகாரம் அதிகம் கொடுக்க வேண்டும். 7 நாட்களில் அதுவாகவே இது சரியாகிவிடும் என்றார்.