/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலப்பிடாவூர் அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்
/
மேலப்பிடாவூர் அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 09, 2024 05:50 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் வெள்ளாரப்பன்(எ)முத்தையா அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இங்குள்ள பூர்ண, புஷ்கலா தேவி சமேத வெள்ளாரப்பன் (எ)முத்தையா அய்யனார் கோயிலில் மராமத்து பணிகள் நடைபெற்றது. இப்பணிகளுக்கு பின் செப்., 6 ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2நாட்களாக 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை பூஜைகள் முடிவு பெற்று பூர்ணாஹூதியும், அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் கடங்களை செல்லப்பா குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி வலம் வந்து ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரம், பரிவார கோபுர கலசங்களில் காலை 8: 20 மணிக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். மேலப்பிடாவூர், குலக்கட்டப்பட்டி கிராமத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.