/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எம்.ஜி.ஆர்., ஜெ., வை முன்னிறுத்திசிவகங்கையில் பா.ஜ., ஓட்டு சேகரிப்பு

ADDED : மார் 25, 2024 06:56 AM
சிவகங்கை, : சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க.,விற்கு 'செக்' வைக்கும் விதமாக எம்.ஜி.ஆர்., ஜெ.,விற்கு வாழ்க கோஷமிட்டு பா.ஜ., வினர் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தேவநாதன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்.,ல் கார்த்தி எம்.பி., இரண்டாவது முறையாக நிற்கிறார். அ.தி.மு.க., சார்பில் கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் மன்னார்குடியை சேர்ந்த எழிலரசி போட்டியிடுகிறார்.
பா.ஜ.,வினர் அ.தி.மு.க.,வினர் ஓட்டுக்களை கவரும் விதத்தில், வேட்பாளர் தேவநாதன் நேற்று மாவட்ட அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, எம்.ஜி.ஆர்., ஜெ., விற்கு வாழ்க கோஷமிட்டு, அவர்களது ஆசியுடன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவதாக தெரிவித்து வருகின்றார். இதே பாணியில் தான் பா.ஜ.,வினர் தேர்தல் பிரசார யுக்திகளை கையாண்டு, மத்திய அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் விளக்கி தேர்தல் பிரசார கூட்டங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.