ADDED : மே 30, 2024 03:27 AM

நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கண்டவராயன்பட்டி செல்லும் ரோட்டில் தவறான ஊர் பெயருடன் மைல் கல் நடப்பட்டுள்ளது.
திருப்புத்துாரிலிருந்து கண்டவராயன்பட்டி செல்லும் ரோட்டில் புதுார் கிராமம் உள்ளது. அக்கிராமத்திலிருந்து 3 கி.மீ. துாரத்தில் புதுார் என்ற பெயருடன் 3 கி.மீ. துாரத்தையும் குறிப்பிட்டு பழைய மைல்கல் நடப்பட்டிருந்தது. அந்தக் கல் நல்ல நிலையில், அதில் எழுதப்பட்டிருந்தும் தெளிவாக இருந்த நிலையில், அந்த மைல் கல் அகற்றப்பட்டு புதிய மைல் கல் நடப்பட்டது. ஆனால் புதிய மைல் கல்லில் 'புதுார்' என்பதற்கு பதிலாக 'துவார்' என்று எழுதப்பட்டுள்ளது.
வெளியூர் பயணிகளை குழப்பும் வகையில் அந்த மைல் கல் நடப்பட்டுள்ளது. துவார் கிராமத்திற்கும் இந்த ரோடு வழியாகத் தான் செல்ல வேண்டும். ஆனால் வேறு திசையில் கூடுதல் தூரத்தில் உள்ளது.