/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் மினி ஸ்டேடியம் திறப்பு
/
காரைக்குடியில் மினி ஸ்டேடியம் திறப்பு
ADDED : மார் 05, 2025 06:24 AM

காரைக்குடி: காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் ரூ.3 கோடிசெலவில் கட்டப்பட்ட மினி ஸ்டேடியத்தை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று திறந்து வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணி 2023 ஆம் ஆண்டு நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். ஸ்டேடியம் அமைக்கும் பணி முடிந்து நேற்று திறப்பு விழா நடந்தது. அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையேற்றார். மாங்குடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை, முன்னாள் அமைச்சர் தென்னவன், விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், தாசில்தார் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மினி ஸ்டேடியத்தில், 400மீ ஓடுதளம், வாலிபால், கூடைப்பந்து, கோ கோ, கபடி மைதானங்கள் பார்வையாளர் அமரும் கேலரி பொருட்கள் வைப்பறை, அலுவல அறை, குளியலறை கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.