/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க., கவுன்சிலர்களிடம் அமைச்சர் சமரசம்
/
தி.மு.க., கவுன்சிலர்களிடம் அமைச்சர் சமரசம்
ADDED : ஜூலை 24, 2024 06:14 AM
காரைக்குடி : காரைக்குடி நகராட்சியில் நேற்று அமைச்சர் பெரியகருப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்குடி நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட பலரும் கூட்டத்தில் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று புகார் எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து கூட்டத்திலிருந்து வெளியே வந்த அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு பேச வாய்ப்பு அளிப்பதில்லை என்றும், ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக புகார் கூறினர். மேலும் தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தார். இது தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று மதியம் அமைச்சர் பெரிய கருப்பன் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்களிடம் கலந்துரையாடினார். கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே தி.மு.க., பெண் கவுன்சிலர் ஒருவர் பாதியிலேயே வெளியேறினார். அவரை கட்சி நிர்வாகிகள் சிலர் சந்தித்து சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்தனர்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்காக வந்திருந்தேன். முழுமையாக விசாரணைக்கு பிறகு அது குறித்து தெரிவிப்போம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலும், வரும் காலங்களில் அது நடைபெறாத அளவிற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவதற்கு தனியாக தேர்தல் ஆணையம் உள்ளது.
அவர்கள் தான் அதற்கான அறிவிப்பை தெரிவிக்க வேண்டும் என்றார்.