ADDED : ஜூன் 05, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை, ஜூன் 6-
மானாமதுரை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் வெற்றி பெற்றார். மானாமதுரை சுந்தரபுரம் அக்ரஹாரம் தெருவில் உள்ள எம்.எல்.ஏ.,அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக மராமத்து பணிகள் நடைபெற்று முடிவு பெற்றதை தொடர்ந்து நேற்று அதனை எம்.எல்.ஏ., இளங்கோவன் திறந்து வைத்தார். கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார். மாவட்ட செயலாளர் முத்துபாரதி, நகர செயலாளர் நம்பிராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
