/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் குரங்குகள் தொல்லை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் குரங்குகள் தொல்லை
ADDED : ஜூலை 01, 2024 10:06 PM
பிரான்மலை:
சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சில மாதங்களாக 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன.
மலை உச்சியில் கூட்டமாக வசித்த குரங்குகளின்ஒரு பிரிவு உணவு, தண்ணீருக்காக அடிவாரத்தில் இறங்கி அங்கேயே தங்கிவிட்டன. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையம், அரசு துவக்க பள்ளிகளில் கூட்டமாக திரிகின்றன. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் குரங்குகளை விரட்ட சிரமப்படுகின்றனர்.
மருத்துவமனை, பள்ளி ஜன்னல்களில் சல்லடை கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் வாசல் வழியாக உள்ளே வந்து விடுகின்றன. வனத்துறையினர் குரங்குகளை பிடித்து அவற்றிற்கு உணவு, தண்ணீர் கிடைக்ககூடிய வேறு இடத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.