/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாதந்தோறும் பிளாஸ்டிக் சேகரிப்பு துாய்மை வாரம் கடைபிடிப்பு
/
மாதந்தோறும் பிளாஸ்டிக் சேகரிப்பு துாய்மை வாரம் கடைபிடிப்பு
மாதந்தோறும் பிளாஸ்டிக் சேகரிப்பு துாய்மை வாரம் கடைபிடிப்பு
மாதந்தோறும் பிளாஸ்டிக் சேகரிப்பு துாய்மை வாரம் கடைபிடிப்பு
ADDED : மார் 05, 2025 06:23 AM
சிவகங்கை: ''சிவகங்கை மாவட்டத்தில் மாதந்தோறும் பிளாஸ்டிக் சேகரிப்பு, துாய்மை பணிகள் மேற்கொள்ளும் வாரமாக 4 வது சனிக்கிழமை செயல்படுத்தப்படும், '' என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழக அரசால் மீண்டும் மஞ்சள் பை பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்து போராடும் அதே வேளையில் துணிப்பை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்தும் பராம்பரிய தமிழ் நடைமுறையை மீண்டும் உயிர்பிப்பதை நோக்கமாக கொண்ட முதன்மை முயற்சி.
இப்பிரசாரம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறைப்பதை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி தீவிரமான பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் விழிப்புணர்வு முயற்சி மூலம் நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளை வலியுறுத்துகிறது.
இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் 4 வது சனியன்று பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் துாய்மை பணிகள் மேற் கொள்ளப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் பிப்., 22 ல் துவக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு சேகரித்தல், பொது இடங்களை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் மாசு குறித்து குடிமக்களுக்கு கற்பிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பூங்கா, தெரு, நீர்நிலைகள், வழிபாட்டு இடங்கள் மற்றும் சந்தைகளில் துாய்மையை மீட்டெடுப்பதில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டத்தில் 1,700 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டன.
அவற்றில் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யவும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் தொழிற்சாலைக்கு எரிபொருளாகவும் அனுப்பப்படுகிறது.
இத்திட்டம் ஒவ்வொரு மாதமும் 4 வது சனியன்று செயல்படுத்தப்படும், என்றார்.