
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசித்திருவிழா பிப். 27 ல் காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
6 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இன்றும், நாளையும் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா வருகிறார். மார்ச் 3ஆம் தேதி கப்பரை திருவிழாவும், மார்ச் 4ம் தேதி பாரிவேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது.