/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சொந்த ஊருக்கு வந்த வாலிபர் கொலை: கிராம மக்கள் மறியல்
/
சொந்த ஊருக்கு வந்த வாலிபர் கொலை: கிராம மக்கள் மறியல்
சொந்த ஊருக்கு வந்த வாலிபர் கொலை: கிராம மக்கள் மறியல்
சொந்த ஊருக்கு வந்த வாலிபர் கொலை: கிராம மக்கள் மறியல்
ADDED : செப் 03, 2024 02:38 AM

மானாமதுரை: சொந்த ஊருக்கு வந்த வாலிபர்கொலை செய்யப்பட்டதையடுத்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளகீழப்பசலையைச் சேர்ந்த ராஜா மகன் பிரவீன்ராஜ் 18. கோவையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பசலைக்கு மானாமதுரை புதுபஸ் ஸ்டாண்டிலிருந்து நண்பர்களோடு டூவீலரில் வந்தார். எதிரே ஒரு டூவீலரில் வந்த சிலர் அவர்களை மறித்தனர்.
அதில் பிரவீன்ராஜ்மட்டும் அவர்களிடம் சிக்கிய நிலையில் நண்பர்கள் தப்பிவிட்டனர்.இரவு முழுதும் தேடி வந்த நிலையில்பிரவீன்ராஜ் நேற்று காலை தீயனுார் கண்மாயில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.மானாமதுரை போலீசார் பிரவீன்ராஜ்உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கீழப்பசலை கிராம மக்கள் கொலையாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி மதுரை - ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் கீழப்பசலை விலக்கு ரோடு அருகேகாலை 9:00 மணியிலிருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் எஸ்.பி.,க்கள் கலைக்கதிரவன், பிரான்சிஸ், டி.எஸ்.பி.,நரேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இந்த மறியலால் 4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மானாமதுரை போலீசார் கூறும்போது, முன்பகை காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.விரைவில் கொலையாளிகள் பிடிபடுவர் என்றனர்.