ADDED : ஏப் 28, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி :  காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா  தினமும் பல்வேறு சமுதாய மக்கள்,அரசு ஊழியர்கள்,மண்டகப்படி சார்பில் நடந்து வருகிறது. வருவாய்த்துறை அலுவலர்கள்,பணியாளர்கள் சார்பில் மூன்றாமாண்டு மண்டகப்படி நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆனந்த விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை சீர்வரிசை பொருட்கள் மற்றும் பூத்தட்டுகளுடன் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.இதில் தாசில்தார்கள் மாணிக்கவாசகம்,தங்கமணி,துணை தாசில்தார் யுவராஜா சர்வேயர் குமார்,ஆர்.ஐ.,சுரேஷ் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நில அளவை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

