/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது இணை இயக்குனர் தகவல்

ADDED : ஜூலை 10, 2024 05:40 AM
சிவகங்கை : இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மாநில அளவில் சிறந்த 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளதாக சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிபிரபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதத்தில், உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது மாநில அளவில் 3 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் முதல் பரிசு ரூ.2.5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.5 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்படும். இந்த விருது பெற விவசாயிக்கு குறைந்தது 1 ஏக்கரில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடியை 3 ஆண்டிற்கு செய்திருக்க வேண்டும். விவசாயிகள் 'அக்ரீஸ் நெட்' ல் செப்., 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மண்ணில் உயிர்ம கரிம சத்து அளவு 1.5 சதவீதம் இருக்க வேண்டும். செலவு அதாய விகிதம் குறைந்தது 1:2 ஆக இருத்தல் வேண்டும்.
உயிர்ம வேளாண்மையில் 1 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்திருக்க வேண்டும். விதைகள், எரு உற்பத்தி, இயற்கை இடுபொருள் உற்பத்தியில் சுயசார்புடன் இருக்க வேண்டும்.
உற்பத்தி செய்த இயற்கை வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். பாரம்பரிய விதை பயன்படுத்தியிருத்தல் அவசியம்.
இவ்விருது பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை அலுவலரை சந்தித்து பதிவு கட்டணமாக ரூ.100 செலுத்தி பதிவு செய்யலாம்.