/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய நாட்டிய போட்டி திருப்புத்துார் மாணவிகள் வெற்றி
/
தேசிய நாட்டிய போட்டி திருப்புத்துார் மாணவிகள் வெற்றி
தேசிய நாட்டிய போட்டி திருப்புத்துார் மாணவிகள் வெற்றி
தேசிய நாட்டிய போட்டி திருப்புத்துார் மாணவிகள் வெற்றி
ADDED : செப் 06, 2024 05:08 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் நாட்டிய மாணவிகள் நாக்பூர் தேசிய அளவிலான இசை, நாட்டிய போட்டியில் பரிசுகள் வென்றனர்.
திருப்புத்துாரைச் சேர்ந்த ஸ்ரீபாலகணேஷ் நாட்டியப்பள்ளி மாணவிகள் நாக்பூரில் நடந்த தேசிய அளவிலான இசை,நடனப் போட்டியில் பங்கேற்றனர்.
மைனர் பிரிவில் ஆர்பி.சியாமளா முதல்பரிசு, ஜி.லிதிக்ஷா மல்லிகா, வி.ஹாசின்ஸ்ரீ இரண்டாமிடம், எஸ்.விகாஸ்ரீ மூன்றாமிடத்தை வென்றனர். ஜூனியர் பிரிவில் எஸ்.விகாஸ்ரீ முதலிடம், ஜி.சாத்விகா இரண்டாமிடத்தை வென்றனர்.
ஜூனியர் டூயட் பிரிவில் டி.மது சந்தனா மற்றும் எஸ்.சொர்ணயாழினி முதலிடம், பி.இனியா,பி.இந்துஜா இரண்டாமிடம், பொதுபிரிவில் டாக்டர் ஜி.இந்துமதி இரண்டாமிடத்தை வென்றனர். மேலும் சிறந்த குழுவிற்கான பரிசு நாட்டியப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.