/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய கிக் பாக்ஸிங்: மாணவர்கள் தேர்வு
/
தேசிய கிக் பாக்ஸிங்: மாணவர்கள் தேர்வு
ADDED : மே 10, 2024 05:00 AM

சிவகங்கை: தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநில கிக் பாக்ஸிங் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மேல கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அமெச்சூர் பாக்ஸிங் சங்கம் சார்பில் நடந்தது. இதில் 21 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இதில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள் புனேயில் நடக்கவுள்ள தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சியாளர் குணசீலன் தலைமையிலான 34 கிக்பாக்ஸிங் வீரர்கள் சிவகங்கை மாவட்ட சார்பாக பங்கேற்று 4 தங்க பதக்கங்களையும் 6 வெள்ளி பதக்கங்களையும் 10 வெண்கல பதக்கங்களையும் வென்றனர். தங்கம் வென்ற இடையமேலுார் அரசு பள்ளி மாணவர்கள் நா.வசந்தன் ஜூனியர் பிரிவு, ஆ.பிரசன்யா கேடட்ஸ் பிரிவு, சிவல்பட்டியை சேர்ந்த க.அனுஷ்கா கேடட்ஸ் பிரிவு, மாண்ட் போர்ட் பள்ளி மாணவர் ரூபன்சாய்சிவன் கேடட்ஸ் பிரிவில் தங்கம் வென்று தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டிக்கு தேர்வாகி தமிழ்நாடு அணி சார்பாக வரும் மே 21 முதல் 26 வரை புனேவில் நடக்கும் தேசிய கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்கின்றனர்.