/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் மீண்டும் நாட்டுத்தக்காளி விற்பனை
/
திருப்புவனத்தில் மீண்டும் நாட்டுத்தக்காளி விற்பனை
ADDED : மார் 05, 2025 06:27 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் மீண்டும் நாட்டுத் தக்காளி விற்பனை துவங்கியுள்ளது.
திருப்புவனத்தை சுற்றியுள்ள அல்லிநகரம், சொக்கநாதிருப்பு, வயல்சேரி, பழையனூர், உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் நாட்டுத்தக்காளி பயிரிடுவது வழக்கம், கடந்த சில வருடங்களாக நாட்டு தக்காளி பயிரிடுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பயிரிட தொடங்கியுள்ளதால் திருப்புவனம் பகுதியில் விற்பனை களை கட்டியுள்ளது.
பெங்களுரூ தக்காளி கிலோ பத்து ரூபாய் என விற்பனை செய்தாலும் நாட்டுத்தக்காளி கிலோ 40 ரூபாய் என்றே விற்பனை செய்யப்படுகிறது.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் தோட்டங்களில் இருந்து நாட்டுத் தக்காளிகளை பறித்து வந்து நகர்ப்புறங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.