/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெற்குப்பை-வேலங்குடி ரோடு இருவழிச் சாலையாகிறது
/
நெற்குப்பை-வேலங்குடி ரோடு இருவழிச் சாலையாகிறது
ADDED : செப் 03, 2024 06:19 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே நெற்குப்பை- - வேலங்குடி ரோடு இருவழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது.
நெற்குப்பையிலிருந்து வடுகபட்டி, கொன்னத்தான்பட்டி வழியாக வேலங்குடிக்கு தற்போது ஒரு வழி தார்ச்சாலை உள்ளது.
வேலங்குடி சுற்று வட்டாரக் கிராமத்தினர்மதுரை, சிங்கம்புணரி, பொன்னமராவதி செல்ல இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டை மேம்படுத்த இப்பகுதியினர் கோரி வந்தனர்.
தற்போது இந்த ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இருவழிச்சாலையாக மேம்படுத்த உள்ளனர்.
முதற்கட்டமாக ரூ. 2 கோடியில் ஒரு கி.மீ.நீளத்திற்கு இருவழிச்சாலையாக அகலப்படுத்த உள்ளனர். அதற்காக மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.