sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் இன்று முதல் புதிய கட்டணம்

/

திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் இன்று முதல் புதிய கட்டணம்

திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் இன்று முதல் புதிய கட்டணம்

திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் இன்று முதல் புதிய கட்டணம்


ADDED : ஜூன் 03, 2024 03:08 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் இன்று முதல் வாகன நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கார், ஜீப், வேன், இலகு ரக வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.90, சுங்கச்சாவடி (24 மணி நேரத்திற்குள்) வழியே சென்று வர ரூ.135, மாத கட்டணமாக (அதிகபட்சம் 50 முறை கடப்பதற்கு) 3,035, மாவட்ட நிர்வாக சலுகை கட்டணத்தில் வர்த்தக வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.45 வசூலிக்கப்படும்.

இலகுரக வணிக வாகனம் ஒரு முறை செல்ல ரூ.145, ஒரு முறை சென்றுவர ரூ.220, மாத கட்டணமாக ரூ.4,900, சலுகை கட்டண வாகனத்திற்கு ரூ.75 வசூலிக்கப்படும்.

பஸ் அல்லது இரண்டு அச்சுகள் கொண்ட டிரக் ஒரு முறை செல்ல ரூ.310, சென்று திரும்ப ரூ.460, மாத கட்டணம் ரூ.10,265, சலுகை கட்டண வாகனம் ஒரு முறை செல்ல ரூ.155 வசூலிக்கப்படும்.

மூன்று அச்சுகள் கொண்ட வணிக வாகனங்கள் ஒரு முறை கடக்க ரூ.335, சென்றுதிரும்ப ரூ.505, மாத கட்டணமாக ரூ.11,200, சலுகை கட்டண வாகனம் ஒரு முறை கடக்க ரூ.170.

கனரக கட்டுமான ரக வாகனம், நான்கு முதல் 6 அச்சுகள் கொண்ட பெரிய வாகனம் ஒரு முறை கடக்க ரூ.485, சென்று திரும்ப ரூ.725, மாத வாடகையாக ரூ.16,100, சலுகை கட்டணம் ரூ.240. 7 முதல் அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட சரக்கு வாகனங்கள் ஒரு முறை கடக்க ரூ.590, சென்று திரும்ப ரூ.880, மாத வாடகை கட்டணம் ரூ.19,600, சலுகை கட்டணமாக ரூ.295 வீதம் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய கட்டணத்தில் இருந்து குறைந்தது ரூ.10 முதல் 25 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us